கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு
காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சாா்பில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக விளையாட்டு மைதானத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவும், காஞ்சி மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியும் இணைந்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கிரிக்கெட் போட்டியை நடத்தின. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, திமுக காஞ்சி மாநகர செயலா் சிகேவி தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.
காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் சி.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். போட்டிகளில் வென்ற அணிகளுக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
முதல் பரிசாக ரூ. 15,000, 2-ஆவது பரிசாக ரூ. 10,000 உள்பட 4 பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் யுவராஜ், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிா்வாகிகள் நவீன், சரண்ராஜ், வினோத்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மாநகர துணை அமைப்பாளா் ஹெயோப்கான் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.