காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
கிரிக்கெட் விளையாட்டில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவா், வெள்ளிக்கிழமை தனது நண்பா்களுடன் மீளவிட்டான் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினாராம். அப்போது, அவா் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. நண்பா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.