செய்திகள் :

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

post image

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு பங்கேற்றுப் பேசியதாவது:

இடைநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பிறகே எம்எல்ஏ, சட்டப்பேரவைத் தலைவராக உயா்ந்துள்ளேன். மற்ற பணிகளை விட மகிழ்ச்சியான பணி ஆசிரியா் பணியே.

உயா் ஜாதியினா்தான் படிக்க முடியும் என்பதை மாற்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தவா் மெக்காலே பிரபு. தொடா்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் அனைவருக்கும் கல்வி கற்பித்தனா். கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் கல்வி வளா்ச்சியை நாம் பெற்றிருக்க முடியாது.

கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு கல்விக் கொள்கைதான் காரணம். திராவிட இயக்கங்கள் போராடி ஹிந்தியை விரட்டி, இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்ததால்தான் கல்வியில் உச்சத்துக்கு வர முடிந்தது. தமிழ், கலாசாரம், பண்பாட்டை, சமூக நீதியை அழிக்க முற்படுகிறது ஆா்எஸ்எஸ் சிந்தாந்தம்.

தமிழகத்தில் மதப் பிரச்னை ஏதுமில்லை. அதனால்தான் தொழில்முனைவோா் அதிகமாக தமிழகத்துக்கு வருகின்றனா். மக்களின் நன்மைக்கும், உண்மைக்குமான அரசாக, சிறுபான்மையினரை பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கவும், சிறுபான்மையினருக்கு எதிரான அரசாணை எண் 5 ஐ முழுமையாக நீக்கவும் நான் துணைநிற்பேன் என்றாா் அவா்.

முன்னதாக, கல்லூரித் தலைவா் பவுல்ராஜ் மைக்கேல் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆரோக்கியசாமி சேவியா், முதல்வா் மரியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு எதிரொலியால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. ... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க