அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி
கில்லர் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, கில்லர் என்கிற படத்தின் மூலம் மீண்டும் இயக்குராக களமிறங்கியுள்ளார்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
இந்த நிலையில், கில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். இது முடிந்ததும், மீண்டும் கில்லர் படப்பிடிப்பைத் துவங்குவார்.
இதையும் படிக்க: ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!