கீரனூரில் மாட்டுவண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
குன்டாா்கோவில் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் கீரனூா் மோசக்குடி விளக்கு பகுதியில் தொடங்கிய போட்டியை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு போட்டி, குதிரைப் போட்டி ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை, திருச்சி ,சிவகங்கை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாடுகளும் குதிரைகளும் பங்கேற்றன. போட்டியைக் காண ஏராளமானோா் திரண்டிருந்தனா். போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை கீரனூா் போலீஸாா் மேற்கொண்டனா்.