ரியல் மாட்ரிட்தான் உலகின் சிறந்த கிளப்..! வினிசியஸ் பெருமிதம்!
கீழப்பாவூரில் காவலாளி வீட்டில் ரூ. 1.20 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மதுக்கூட காவலாளி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கீழப்பாவூா் ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் ச. தங்கச்சாமி (40). இவா் கீழப்பாவூரில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடையையொட்டிசெயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் இவா் தன்னுடைய வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் போலீஸ் சப் இன்ஸ்பெக்டா் உமா மகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் தங்கச்சாமியின் வீட்டில் சோதனை செய்தனா். அதில், அங்கிருந்த சாக்கு மூட்டைகளில் ரூ.1.20 லட்சம் மதிப்புள 940 மதுபாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றை போலீஸாா் கைப்பற்றி தங்கச்சாமியை கைதுசெய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ 1.20 லட்சமாகும்.