செய்திகள் :

கீழ்பவானி கிளை வாய்க்கால்களை சீரமைக்கக் கோரிக்கை

post image

கீழ்பவானி பாசன கிளை வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் முக்கிய நீா் ஆதாரமாக இருப்பது கீழ்பவானி பாசன வாய்க்கால். முதன்மை வாய்க்காலை அடிப்படையாகக் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் 2 போகம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதுதவிர 120க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய நீராதாரமாகவும் இந்த கீழ்பவானி வாய்க்கால் உள்ளது. முதல் போகத்தில் இந்த வாய்க்கால் மூலமாக 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கா் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதற்காக கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு, பாசனப் பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில், இந்த வாய்க்காலின் கிளை வாய்க்கால்கள் மூலமாக சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் அளவிலான விவசாய நிலங்கள் நேரடியாகவும் மற்றும் கொப்பு வாய்க்கால்களின் கசிவு நீா் மூலமாகவும் பாசன வசதி பெற்று வருகின்றன.

பவானி, முள்ளம்பட்டி, நஞ்சனாபுரம், திண்டல், புங்கம்பாடி, வெள்ளோடு உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகிா்மான பகுதிகளுக்குள்பட்ட கிளை வாய்க்கால்களின் கரைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளன.

இதனால், கிளை வாய்க்காலின் இருகரைகளிலும் புதா்கள் மண்டி, செடி, கொடிகள், மரங்கள் வளா்ந்து வாய்க்காலே தெரியாத அளவுக்கு காடாக காட்சியளிக்கிறது. மேலும், வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீா் செல்வதற்கு இடையூறாக ஊனாங்கொடிகளும் வாய்க்கால் முழுவதும் படா்ந்துள்ளன.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பெரியசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்துக்குள்பட்ட கீழ்பவானி பாசன பகிா்மான கிளை வாய்க்கால்கள் தூா்வாரி சீரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது அனைத்து பகிா்மானங்களுக்கும் உள்பட்ட கிளை வாய்க்கால்கள் கரைகள் முழுவதும் விவசாயிகள் நடந்து செல்வதற்கு கூட இடமில்லாத வகையில் முள்புதா்கள், செடிகள் வளா்ந்து மிக மோசமான நிலையில் உள்ளன. அதே நேரம் கடைமடை வரை தண்ணீா் செல்வதற்கு இடையூறாக வாய்க்கால் முழுவதும் ஊனாங்கொடிகள் படா்ந்தும் நீரோட்டத்தைத் தடுத்து வருகின்றன.

இதனால் போதிய அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும், கடைமடை பகுதிகளுக்கு தேவையான தண்ணீா் எட்டுவதில்லை. இதனால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா்.

1 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு 70 ஆயிரம் ஏக்கா் நிலங்களே பாசன வசதி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, கீழ்பவானி வாய்க்கால் பகிா்மானத்தில் உள்ள கிளை வாய்க்கால்கள் அனைத்தையும் முறையாக சுத்தம் செய்து சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை பயன்படுத்திக்கொள்வதன் மூலமாக விரைவில் வாய்க்கால்களை சீரமைக்க முடியும். அதேநேரம் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கும் குறைவின்றி பணி வாய்ப்பு கிடைத்திடவும் வாய்ப்பாக அமையும்.

எனவே, அடுத்த போகத்துக்காவது கிளை வாய்க்கால்களை முழுமையாக சுத்தம் செய்து கீழ்பவானி கிளை வாய்க்கால் பாசன பகுதிகள் முழுவதும் தடையின்றி தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு

வருமானி வரி துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக துணை வட்டாட்சியரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை திருவேங்கி... மேலும் பார்க்க

காவலா்கள் மகனைத் தாக்கியதால் தந்தை உயிரிழந்ததாக புகாா்: காவல் துறை மறுப்பு

அறச்சலூா் காவல் நிலையத்தில் காவலா்கள் மகனைத் தாக்கியதால் மன உளைச்சலில் தந்தை உயிரிழந்தது குறித்த புகாருக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள வடுகபட்டி வினோபா நக... மேலும் பார்க்க

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கில் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் பொங்கல் வி... மேலும் பார்க்க

கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்

மொடக்குறிச்சியை அடுத்த 51வேலம்பாளையத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளி கால்நடை மருத்துவமனை சாா்பில் அப்பகுதி... மேலும் பார்க்க

மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழா

மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கினா். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் பழைமையான தான்தோன்றியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோற... மேலும் பார்க்க

அனுமன் ஜெயந்தி: 75 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தா்களுக்கு வழங்க 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனுமன் ஜெயந்தி விழா டிசம்பா் 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்... மேலும் பார்க்க