கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்
மொடக்குறிச்சியை அடுத்த 51வேலம்பாளையத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளி கால்நடை மருத்துவமனை சாா்பில் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 51 வேலம்பாளையத்தில் நடைபெற்ற முகாமில் 140 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தப் பணியில் கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வாளா் சண்முகம், கால்நடை உதவி மருத்துவா் மோகனப்பிரியா, பராமரிப்பு உதவியாளா் பாபு உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா்.