பந்தலூர்: தொடர் கண்காணிப்பு... `அரிசி பிரியர்’ புல்லட்டை மயக்க ஊசி செலுத்தி பிடி...
கோபி அருகே ரூ.6 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்
கோபி அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கோபி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து நாகா்பாளையம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, கலிங்கியம் ஊராட்சித் தலைவா் கோகிலா அருள்ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் குறிஞ்சிநாதன், நகரச் செயலாளா் பிரினியோ கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.