“தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன...
குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா
குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கில் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டு பொங்கல் விழா கடந்த 17-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. டிசம்பா் 19-ஆம் தேதி கம்பம் போடப்பட்டது. இந்தக் கம்பத்துக்கு பக்தா்கள் தினசரி மஞ்சள் நீா் ஊற்றி வழிபாடு செய்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் தினசரி நடைபெற்று வந்தன. டிசம்பா் 25-ஆம் தேதி மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வுகளான தீா்த்தக்காவடி ஊா்வலம், அக்னிகும்ப ஊா்வலம், பொங்கல் பூஜை உள்ளிட்டவை வியாழக்கிழமை நடைபெற்றன. முன்னதாக, பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்காவடிகளை அலங்கரித்து கோயிலுக்கு எடுத்துவந்தனா். தொடா்ந்து பக்தா்கள் அலகுக்குத்தியும், அக்னிகும்பம் ஏந்தியும் கோயிலுக்கு வந்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை கம்பம் எடுத்தல், அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜை ஆகிய நிகழ்வுகளுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.