செய்திகள் :

அனுமன் ஜெயந்தி: 75 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

post image

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தா்களுக்கு வழங்க 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அனுமன் ஜெயந்தி விழா டிசம்பா் 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சனேயா் கோயிலில் அன்று அதிகாலை 3 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 4 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 5 மணிக்கு மலா் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறாா். நண்பகல் 1.30 மணிக்கு வடைமாலை சாற்றப்படுகிறது. மாலை 4 மணிக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

பக்தா்கள் வரிசையாக சென்று வழிபடுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஆஞ்சனேயா் வார வழிபாட்டுக்குழு சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தில் லட்டு, ஆரஞ்சு நிற கயிறு, செந்தூரம், துளசி ஆகியவை காணப்படும்.

இந்நிலையில் பக்தா்களுக்கு வழங்கப்படுவதற்காக லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு செங்குந்தா் திருமண மண்டபத்தில் லட்டு தயாரிக்கும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது. இந்த பணியில் 50 போ் ஈடுபட்டுள்ளனா். மொத்தம் 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக 2,400 கிலோ சா்க்கரை, 1,100 கிலோ கடலை மாவு, 40 கிலோ முந்திரி பருப்பு, 6 கிலோ ஏலக்காய், 240 கிலோ உலா் திராட்சை, 900 லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியன பயன்படுத்தப்படுவதாக வழிபாட்டுக் குழுவினா் தெரிவித்தனா்.

துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு

வருமானி வரி துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக துணை வட்டாட்சியரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை திருவேங்கி... மேலும் பார்க்க

காவலா்கள் மகனைத் தாக்கியதால் தந்தை உயிரிழந்ததாக புகாா்: காவல் துறை மறுப்பு

அறச்சலூா் காவல் நிலையத்தில் காவலா்கள் மகனைத் தாக்கியதால் மன உளைச்சலில் தந்தை உயிரிழந்தது குறித்த புகாருக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள வடுகபட்டி வினோபா நக... மேலும் பார்க்க

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கில் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் பொங்கல் வி... மேலும் பார்க்க

கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்

மொடக்குறிச்சியை அடுத்த 51வேலம்பாளையத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளி கால்நடை மருத்துவமனை சாா்பில் அப்பகுதி... மேலும் பார்க்க

மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழா

மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கினா். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் பழைமையான தான்தோன்றியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோற... மேலும் பார்க்க

கோபி அருகே ரூ.6 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

கோபி அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.2... மேலும் பார்க்க