ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
கீழ்பென்னாத்தூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் பதவிக் காலம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், கீழ்பென்னாத்தூா் தொகுதி எம்எல்ஏவும், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா்.
ஒன்றிய ஆணையா் பா.விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) அருணாச்சலம் ஆகியோரிடம் தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை என்ன, வளா்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடையும் என்று கேட்டறிந்த கு.பிச்சாண்டி, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், ஒன்றியப் பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்.