செய்திகள் :

`குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்க ஏன் சம்மதிச்சேன்னா?' - லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் ராக்

post image

விஜய் டிவியில் வரும் ஞாயிறு முதல் தொடங்கவிருக்கிறது குக்கு வித் கோமாளி சீசன் 6.

இந்த முறை தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடன் செஃப் கௌசிக்கும் சேர்ந்துள்ளார்.

வழக்கமான காம்போ போரடித்து விட்டதாக கருதினார்களோ என்னவோ, கோமாளிகளிலும் வழக்கமான புகழ், ராமர் காம்போவுடன் புதிதாக நான்கு பேரை இறக்கி விட்டிருக்கிறார்கள்.

குக்குகளாக வரப்போகிறவர்கள் பட்டியல் என சமூக ஊடகங்களில் பெரிய பட்டியலே உலா வந்தது.

தீபக், நடிகை வடிவுக்கரசி, உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் சிலரது பெயர்களை சேனலே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். பிரியா ராமன், சபானா உள்ளிட்ட இந்தப் பட்டியலில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பெயர்தான் பலருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

ரீவைண்ட்

ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவியின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தவர் அவர். அவர் நடித்த படங்களின் புரொமோஷன் என்றாலும் கூட அவர் கலந்து கொள்வதை தவிர்த்தே வந்திருக்கிறார்.

விஜய் டிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்குமிடையிலான பிரச்னை சின்னத்திரையில் ஓரளவு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக அதையும் ஒரு ரீவைண்ட் பார்த்து விடலாம்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும். லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு டிவி ஏரியாவில் பெரிய வரவேற்பு. நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்களிடம் அவர் பேசுகிற போது அடிக்கடி பயன்படுத்திய ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்கிற வார்த்தை பெரிய அளவில் பிரபலமானது.

லட்சுமி ராமகிருஷ்ணன்

அப்போது விஜய் டிவியில் `அது இது எது’ நிகழ்ச்சியில் ராமர் டீமும் சொ.உ. நிகழ்ச்சியைக் கிண்டல் செய்வது போல் ஸ்பூஃப் செய்தது.

லட்சுமி ராமகிருஷ்ணனை மிமிக்ரி செய்வது போலவே ராமர் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’எனக் கலாய்த்துக் காயப்போட, முதலில் மௌனம் காத்தார் லட்சுமி.

ஆனால் அதையே கலக்கப் போவது யாரு டீம் திரும்பவும் செய்ய தனது ஆட்சேபனையை விஜய் டிவியிடம் தெரிவித்தார். தொடர்ந்து , வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பினார். அதன்பிறகு சேனல் தரப்பும் தனது வருத்தத்தைத் தெரிவிக்க, இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது எந்த ராமர் மூலம் விஜய் டிவியுடன் பிரச்னை உண்டானதோ அதே ராமரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அவரையே தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டோம்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

எத்தனை நாள்தான் நாமும் சீரியஸாகவே இருக்கறது?

‘’பழைய பிரச்னைதான் அப்பவே முடிஞ்சிடுச்சே. அதே ராமரை என் ஷோவுக்கே கூட்டி வந்ததெல்லாம் கூட எல்லாருக்கும் தெரியுமே. இன்னொரு டைம் ராமருக்கு நடந்த ஃபேன் மீட்லயும் நான் பேசியிருக்கேன்.

அன்னைக்கு கோபம் இருந்ததுதான். அதனாலதான் இத்தனை வருஷத்துல சேனல் பல முறை கூப்பிட்டும் நான் தவிர்த்துட்டே வந்தேன்.

இப்ப இந்த நிகழ்ச்சி குறித்து ஒரு பொண்ணு பேசினாங்க. அவங்க பேசின விதமும் என்னை ரொம்பவே ஈர்த்துச்சு. பொதுவா சீரியஸான நிகழ்ச்சிகள்ல மட்டுமே ஆர்வம் காட்டி வந்த என்னை கன்வின்ஸ் பண்றதுல அவங்க ஜெயிச்சிட்டாங்கனு சொல்லலாம்.

தவிர எத்தனை நாள்தான் நாமும் சீரியஸாகவே இருக்கறது? ஜாலியாவும் ஒரு ஷோ பண்ணலாமேனு எனக்கும் தோணுச்சு. நானும் கொஞ்சம் மாறிட்டேனு கூடச் சொல்லலாம்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்த ஷோ மூலம் கூட நாம சொல்ல நினைக்கற சேதிகளைச் சொல்ல முடியும்னு நினைக்கிறேன், பார்க்கலாம்’ என்கிறார்.

இதற்கிடையில், ’கொஞ்சம் பொறுங்க, பழைய டெரர் லட்சுமி ராமகிருஷ்ணனை இனி பார்க்க முடியாதா என அவசரப்பட்டு முடிவுக்கு வந்துடாதீங்க, அவங்க தன்னுடைய ஃபேவரைட் ஃபார்முலாவுல பண்ணுகிற ஒரு நிகழ்ச்சியும் சீக்கிரமே வேறொரு சேனல்ல வரவிருக்கு’ என்கிறது இன்னொரு சோர்ஸ்.

எது எப்படியோ நீண்ட் இடைவெளிக்குப் பின் விஜய் டிவி பக்கம் வந்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.!

மிஸ் பண்ணிய தலைவர், டிக் செய்த ஜெயலலிதா 'நேருக்கு நேர்' ரபி பெர்னார்டு |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 7

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து, ரசிகர்களால் தீவிரமாக கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார... மேலும் பார்க்க

Irfan: ``மன்னுச்சுகோங்க! நான் அப்படிப்பட்டவன் இல்ல; நடந்தது இதுதான்'' - யூடியூப்பர் இர்பான் விளக்கம்

பிரபல யூடியூப்பரான இர்பான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கார் விபத்து, குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தை பொதுவெளியில் சொன்னது, பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ-... மேலும் பார்க்க

நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்ன?

'சிந்து பைரவி' சீரியல் பிரச்னை தொடர்பாக நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ளது.அடுத்த ஒரு வருடத்துக்கு அவர் எந்தவொரு டிவியிலும் சீரியலிலோ அல்லது ரியாலிட்டி ஷோவிலோதலைகாட்ட முடியாது என்கிறார்கள்.ச... மேலும் பார்க்க

`அன்னைக்கு சினிமா நடிகர்களுக்கு நிகரான புகழ்..!’ - 'தூர்தர்ஷன்' நிஜந்தன்

பொழுதுபோக்கு, செய்தி, விளையாட்டு என இன்று ஒவ்வொரு ஏரியாவுக்கும் தனித்தனியாக நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்து விட்டன. ஆனால் தனியார் சேட்டிலைட்சேனல்கள் வருவதற்கு முன்? 'ஒன் மேன் ஆர்மி'யாககோலோச்சிக் கொண்டி... மேலும் பார்க்க

"நான் சீரியஸான உடல்நலப் பிரச்னையில் இருக்கிறேன்; வதந்திகளைப் பரப்பாதீர்கள்" - பவித்ரா லட்சுமி வேதனை

‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி.‘ஓகே கண்மணி’, ‘நாய் சேகர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.சமீப காலமாக அவர் உடல் மெலிந்து காணப்படுவது பற்றி இணையத்தில் பல விதமான கமெண்டுகள... மேலும் பார்க்க