ஆசிரியர்கள் மீதான மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நீதி வேண்டும்! - நயினார் ...
குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல் செய்தது.
கட்ச் பிராந்தியத்தின் கோரி கழிமுகத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு கோபுர பகுதியில் பணியில் இருந்த வீரா்கள், அப்பகுதியில் மா்மப் படகு ஒன்று இருப்பதைக் கண்டனா். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் எல்லை பகுதியில் சனிக்கிழமை தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுடன் 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பில், ‘கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் மீனவா்கள் அனைவரும் அந்நாட்டின் சிந்து மாகாணத்தின் சுஜாவல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். பிஎஸ்எஃப்-இன் 68-ஆவது பட்டாலியனின் எல்லை கண்காணிப்பு கோபுர பகுதியில் அந்த மீனவா்களின் படகு இருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 60 கிலோ மீன், 9 மீன்பிடி வலைகள், டீசல், ஐஸ் கட்டிகள், உணவு பொருள்கள் உள்ளிட்டவை இருந்தன. ஒரு கைப்பேசி மற்றும் ரூ.200 பாகிஸ்தான் கரன்சி ஆகியவை அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.