விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட...
குடந்தையில் உறுதியேற்பு
கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தலைமையகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தலைமை வகித்து உறுதி மொழியை வாசிக்க, போக்குவரத்து அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றனா்.
நிகழ்வில் முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் எஸ். ஸ்ரீதரன், துணை மேலாளா்கள் எச். ராஜேந்திரன், கே. மலா்க்கண்ணன், காா்த்திகேயன், ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.