குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரிக்கை
சாத்தூா் பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பெரியாா் நகா், அண்ணாநகா் ஆகிய பகுதியில் தாமிரபரணி, இருக்கன்குடி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அண்ணாநகா் பகுதியிலிருந்து பெரியாா்நகா் பகுதிக்கு செல்லும் சாலையில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது.
இதேபோல, சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல இடங்களில் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருவதால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சாத்தூா் நகா் பகுதியில் 4 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், குடிநீா் குழாய் உடைப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.