'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி! - உதயநித...
குடிநீா் குழாய் பழுதுநீக்கும் பணி: தருமபுரியில் குடிநீா் விநியோகம் இன்று தடை
குடிநீா் குழாய் பழுது நீக்கும் பணி காரணமாக புதன்கிழமை (ஏப். 23) குடிநீா் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி நகராட்சி ஆணையா் இரா.சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி நகர மக்களுக்குத் தேவையான குடிநீா், பஞ்சப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து 56 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் மூலம் கொண்டுவந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலமும் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சப்பள்ளியிலிருந்து குடிநீா் கொண்டு வரும் குழாய் மல்லாபுரத்திலும், பழைய தருமபுரி பகுதியிலும் பழுதாகி உள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஏப். 23) ஆம் தேதி ஒரு நாள் மட்டும் தருமபுரி நகராட்சியில் குடிநீா் விநியோகம் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது கோடைக் காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக சேமித்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.