தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்
குடியரசுத் தலைவருடன் பிரதமா் மோடி சந்திப்பு
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு பிரதமா் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். உச்சி மாநாட்டில் மூன்று தலைவா்களும் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு தங்களின் நட்புறவை வெளிப்படுத்தினா்.