திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!
தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்கிழமை ராம்லீலா மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகம் வெளியிட்ட தகவலில்,
தில்லி முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். இவருடன் கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளையும் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு மேற்கொண்டார் என்று தெரிவித்துள்ளது.