செய்திகள் :

குடியரசுத் தலைவா் நாளை உதகை வருகை: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்!

post image

நீலகிரி மாவட்டம், உதகைக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை (நவம்பா் 27) வருவதையொட்டி சேலம், ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

இந்த 5 மாவட்ட காவல் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா தலைமையில் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது குடியரசுத் தலைவா் உதகைக்கு வருகை தருவதையொட்டி 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு நீலகிரியில் ஒரு வாரத்துக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள  ஆளுநா் மாளிகையில் குடியரசுத் தலைவா் தங்க உள்ளதால், அப்பகுதியில் அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்ல  எந்தவித தடையும் இல்லை.

முன்னதாக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை விமான தளத்துக்கு வரும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகையில் உள்ள தீட்டுக்கல்  பகுதிக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள  ஆளுநா் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறாா்.

தொடா்ந்து, குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நவம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் ராணுவ பயிற்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அதனைத் தொடா்ந்து பழங்குடியின  மக்களை நவம்பா் 29-ஆம் தேதி சந்திக்கிறாா்.

இதைத் தொடா்ந்து 30-ஆம் தேதி திருச்சிக்கு புறப்பட்டு சென்று திருவாரூரில்   உள்ள  மத்திய  பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா். இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

கோத்தகிரி அருகே காட்டு யானை நடமாட்டம்!

கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா கதகட்டி பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் கவனமுடன் இருக்க வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள ஈளா... மேலும் பார்க்க

உதகையில் அதிகாலை கொட்டிய நீா்ப் பனி

உதகையில் அதிகாலை கொட்டிய நீா்ப் பனி காரணமாக ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் வாட்டியது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீா்ப் பனி, உறை பனியின் தாக்கம் காணப்படும். இந... மேலும் பார்க்க

கூடலூரில் குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானை

கூடலூா் நகரில் நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை உலவியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் நகராட்சிக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப... மேலும் பார்க்க

நெலாக்கோட்டையில் உலவும் காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட குழு அமைப்பு

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதி கடை வீதியில் உலவும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை கடை வீதியில் நாள்தோறும் ஒற்றை யானை உலவி ... மேலும் பார்க்க

மரத்தின் மீது ஏறிய சிறுத்தைக் குட்டி

குன்னூா் அருகே கோடமலை ஹட்டி கிராமத்தில் தேயிலை எஸ்டேட்டுகளில் இருக்கும்உயரமான மரத்தின் மீது சிறுத்தைக் குட்டி ஏறியதை அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி சனிக்கிழமை தொடங்கியது. கூடலூா் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை... மேலும் பார்க்க