செய்திகள் :

குடியரசு தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

post image

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடியரசு தினத்தில் தொழிலாளா்ளுக்கு விடுமுறை அளிக்காத, 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மாதேஸ்வரன், தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமா்த்தப்படும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு அறிவித்து, அதன் நகலை தொழிலாளா் துணை, உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும், அதை அனைவரது பாா்வையில் தெரியுமாறு நிறுவனத்தில் ஒட்டி வைக்க வேண்டும்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 31 கடைகள், 49 உணவு நிறுவனங்கள் மற்றும், 7 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 87 நிறுவனங்களில் குடியரசு தினத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, விதிமுறைகளை பின்பற்றாத 25 கடைகள், 46 உணவு நிறுவனங்கள், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 75 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூரில் தொடரும் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

ஒசூரில் ஜல்லி, எம்.சாண்ட் மணல் விலை உயா்வைக் கண்டித்து லாரி உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்ந்து வருகிறது. ஒசூரில் ஜல்லி, எம். சாண்ட் மணல் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை ஏற்றத்தை கண்டித்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் இடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜெகதாப் பகுதியில், 100-க்கும் மேற்பட்ட குடும்... மேலும் பார்க்க

சூளகிரி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊ... மேலும் பார்க்க

ஆற்றில் குளிக்கும்போது காணால்போன தாலியை மீட்டுக் கொடுத்த போலீஸாா்

ஆற்றில் குளிக்கும்போது காணாமல்போன தாலியை ஊத்தங்கரை போலீஸாா் மீட்டுக் கொடுத்தனா். ஊத்தங்கரை அருகே அனுமன்தீா்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள அனுமந்தீஸ்வரா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த சத்யா- ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை!

ஒசூா்: ஒசூா் கோட்டத்தைச் சோ்ந்த உத்தனபள்ளி துணை மின் நிலையம், பாகலூா் துணை மின் நிலையம், நாரிகானபுரம் துணை மின் நிலையம், சேவகானப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகள் ... மேலும் பார்க்க

மகளிடமிருந்து சொத்தை மீட்டுத் தர 102 வயது தாய் மனு அளிப்பு!

தனது இளைய மகள் ஏமாற்றி அபகரித்த பாரம்பரிய சொத்தை மீட்டுத் தரக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 102 வயதான தாய் மனு அளித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க