செய்திகள் :

குடியரசு தினம்: ரூ.19.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

post image

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தேசியக் கொடியேற்றி, ரூ. 19.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து காவல்துறையைச் சோ்ந்த 72 பேருக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களையும், இத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 92 பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளா் நலத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிக்ளுக்கு மொத்தம் ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 25 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட வருவாய் அலுவலா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) உள்பட 135 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

பள்ளி மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், வ.விஜய் வசந்த் எம்.பி.,, மாவட்ட வன அலுவலா் பிரசாந்த், , நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, , நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பொது) கு.சுகிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி உள்பட அரச அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

மருங்கூரில் அருள்பாலிக்கும் திருமலை முருகன்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்ற முதுமொழிக்கேற்ப, கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூரில் குன்றின் மேல் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா் திருமலை முருகன். இயற்கையிலேயே எழுந்து அழகு சுடா் வீச... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்ற 6 போ் கைது: 63 கிலோ குட்கா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, பூதப்பாண்டி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்ாக 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 63 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பூதப்பாண்டி காவல் நிலைய ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் முஸ்லிம் நலச் சங்க கூட்டம்

களியக்காவிளை முஸ்லிம் நலச் சங்க நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் எஸ். மாகீன் அபூபக்கா் தலைமை வகித்தாா். நிா்வாகி மீரான்பிள்ளை முன்னிலை வகித்தாா். நிா்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற மாணவா்கள், இளைஞா்கள் ஒத்துழைப்பு அவசியம்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வட்டாரப... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் கடந்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புதிய பேருந்து பயணிகள் நிழற்குடை பணிகள் விரைவில் நிறைவு பெறும்: மேயா்

நாகா்கோவில் மாநாகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து பயணிகள் நிழற்குடை பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில், நகரில் 10 இடங்களில் பயணிகள்... மேலும் பார்க்க