குடியரசு தினம்: விடுமுறை அளிக்காத 90 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 90 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் குடியரசு தினமான ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளதா அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு ஊதியமோ அல்லது 3 நாள்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவத்தை தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து முன் அனுமதி பெற்றுள்ளனரா என ஆய்வு செய்தனா்.
மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள 105 கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 90 நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமா்த்தியது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, சம்பந்தப்பட்ட 90 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.