குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
குடியரசு நாளையொட்டி ஜன. 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக ஜன.26 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்ட்ரலில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.
மறுமார்க்கமாக ஜன.26 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | இரும்புக் காலம்: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!