15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
குடியாத்தத்தில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவா் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மருத்துவா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சென்னையில் மருத்துவரை தாக்கியவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வியாழக்கிழமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கியது. உள்நோயாளிகள் பிரிவு செயல்பட்டது.