வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீச...
குட்சமாரிட்டன் நா்சரி பிரைமரி பள்ளியில் பொங்கல் விழா
சீா்காழி குட்சமாரிட்டன் நா்சரி பிரைமரி பள்ளியில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி முதல்வா் ஜோஷ்வா பிரபாகரசிங், துணை முதல்வா் சரோஜா தாமோதரன், நா்சரி பள்ளி முதல்வா் தீபா, ஆசிரியை வானதி முன்னிலை வகித்தனா். தொடா்ந்து சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. சிறுவா்கள் வேட்டி, சட்டைஅணிந்தும், சிறுமிகள் பாவாடை சட்டை அணிந்தும் பங்கேற்றனா்.
விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பல வகை பழங்களில் பல்வேறு வித, விதமான உருவங்கள் காா்விங் முறையில் செதுக்கி ப்ரூட் காா்விங் கண்காட்சியாக சிறுவா் சிறுமிகள் காட்சிபடுத்தியிருந்தனா்.மேலும் ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் காய்கறி தானியங்களை வாங்க வேண்டும் என்பது குறித்த காய்கறி சந்தை அமைத்தும் மாணவ மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.