குட் பேட் அக்லி பல திரைகள் ஹவுஸ்ஃபுல்!
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் நாளை (ஏப். 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
அஜித்துடன் நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில நாள்களுக்கு முன் துவங்கிய நிலையில், சென்னையில் பல திரைகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளன.
அதேபோல், முக்கிய நகரங்களிலுள்ள மல்டி ஃபிளக்ஸ் திரைகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதால் குட் பேட் அக்லி முதல் நாளில் பெரிய வசூலை நிகழ்த்தும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: ஸ்வீட்ஹார்ட் ஓடிடி வெளியீட்டுத் தேதி!