மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
மானூா் அருகே வன்னிக்கோனந்தல் வடக்குத்தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மனோஜ் (19). இவா், அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.