சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
குண்டா் சட்டத்தில் ரெளடி கைது
வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
வேலூரை அடுத்த அரியூா் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் அஜித் குமாா் (25). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, ஒரு குற்ற வழக்கு தொடா்பாக அரியூா் போலீசாா், அஜித்குமாரை கைது செய்து கடலூா் சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித் குமாரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித்குமாரிடம் அளிக்கப்பட்டது.