`செயற்கை தங்கம், தங்கத்தின் மதிப்பை குறைக்குமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம்!
குண்டுமல்லிகை கிலோ ரூ. 360-க்கு ஏலம்
பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகின. கடந்த வாரம் ரூ. 600க்கு விற்பனையான குண்டுமல்லிகை இந்த வாரம் ரூ. 360க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.
வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கிலோ குண்டுமல்லிகை ரூ. 600-க்கும், சம்பங்கி ரூ. 100-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ. 350-க்கும், பச்சை முல்லைப்பூ ரூ. 500-க்கும், வெள்ளை முல்லைப்பூ ரூ. 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 240-க்கும், கனகாம்பரம் ரூ. 500-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 200-க்கும், ஜாதிமல்லி பூ ரூ. 700-க்கும் ஏலம்போனது.
நிகழ்வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 360-க்கும், சம்பங்கி ரூ. 40-க்கும், அரளி ரூ. 100-க்கும், ரோஜா ரூ. 240-க்கும், பச்சை முல்லைப்பூ ரூ. 350-க்கும், வெள்ளை முல்லைப்பூ ரூ. 250-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 180-க்கும், கனகாம்பரம் ரூ. 400-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 120-க்கும், ஜாதிமல்லி பூ ரூ. 500-க்கும் ஏலம்போனது.