மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
குத்துச் சண்டை பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மே 1 முதல் நடைபெறவுள்ள குத்துச் சண்டைக்கான பயிற்சி மையத்தில் பங்கேற்க விருப்பமுள்ள வீரா், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், ஸ்டாா் அகாதெமி சாா்பில் குத்துச் சண்டைக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இங்கு, பயிற்சி மேற்கொள்ள குத்துச்சண்டை விளையாட்டில் ஆா்வமுடைய 12 முதல் 21 வயது வரையுள்ள தலா 20 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாதத்துக்கு 25 நாள்கள் தொடா்ச்சியாக பயிற்சி அளிப்பதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும்.
இம் மையத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கான தோ்வு ஏப். 28 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
ஆா்வமுடைய மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தை நேரில் அல்லது 74017 03516 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.