செய்திகள் :

குன்னூர்: மலைச்சரிவில் சிசுவுடன் பரிதாபமாக இறந்து கிடந்த கர்ப்பிணி யானை! - என்ன சொல்கிறது வனத்துறை?

post image

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து நேற்று மதியம் முதல் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்தேகமடைந்த பழங்குடிகள் அருகில் சென்று பார்த்துள்ளனர். யானை ஒன்று இறந்து உடல் அழுகி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணி யானை உயிரிழப்பு

அந்த பகுதிக்கு செல்ல வனத்துறையினர் முயற்சி மேற்கொண்ட நிலையில், அந்த பகுதியில் யானை கூட்டம் ஒன்று நடமாடி வந்த காரணத்தால் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சென்ற வனத்துறையினர், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பெண் யானை ஒன்றும் அதன் வயிற்றில் இருந்த பச்சிளம் சிசுவும் பரிதாபமாக இறந்து கிடப்பதை கண்டுள்ளனர். இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறையினர், " நீலகிரி வனக்கோட்டம் குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பர்லியார் , கோழிக்கரை கிராமம் அருகே வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கர்ப்பிணி யானை ஒன்று அடி சறுக்கி சரிவுப்பகுதியில் இருந்து கீழே விழுந்துள்ளது. அருகில் ஒரு மரத்தின் இடுக்கில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது. வயிற்றில் இருந்த சிசுவும் வெளியே வந்து இறந்துள்ளது‌. பெண் யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டதில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 வயதுடைய இந்த யானையின் இறப்புக்கான முழுமையான காரணம் குறித்து அறிய தொடர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் " என்றனர்.

கர்ப்பிணி யானை உயிரிழப்பு

'யானைகளின் முக்கிய வழித்தடங்கள் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் மலைச்சரிவு வனப்பகுதியில் நடைபெற்று வரும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் தடம் மாறும் யானைகள் பள்ளத்தாக்குகளில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழக்கும் துயரம் தொடர்ந்து வருகிறது. முறையான ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ED: யுவராஜ் சிங், உத்தப்பா முதல் நடிகை ஊர்வசி வரை... சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! - பின்னணி என்ன?

ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நாடுமுழுவதும் முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வ... மேலும் பார்க்க

6 மாத கண்காணிப்பு; சிக்கிய அஸ்ஸாம் பெண் அதிகாரி: ரெய்டில் ரூ.2 கோடி தங்கம், பணம் பறிமுதல்!

அஸ்ஸாம் சிவில் சர்வீஸ் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் நுபுர் போரா. தற்போது சர்க்கிள் அதிகாரியாக இருக்கும் நுபுர் போரா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக முதல்வர் அலுவலகத்திற்கு வந்த புகா... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `தந்தையுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்தேன்'- போலீஸாரையே அதிரவைத்த இளஞ்சிறார்!

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள திரேஸ் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் வேலையில் பணிபுரிந்து வருகிறார். ராமசுப்புவின் மனைவி சக்தி மகேஸ்வரி இவர்களுக்கு இரண்டு ... மேலும் பார்க்க

சென்னை: பெண் தொழிலதிபரிடம் ரூ.10.89 கோடி மோசடி - தம்பதி, வழக்கறிஞர் கைது!

சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி (50). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 11.06.2025-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரக... மேலும் பார்க்க

`அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ... மேலும் பார்க்க

BMW கார் விபத்து வழக்கில் கைதான பெண், திகார் சிறையில் அடைப்பு; நடந்தது விபத்தா, கொலையா!?

தலைநகர் டெல்லியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த நவ்ஜோத் சிங் (வயது 52) என்ற அதிகாரி பலியான சம்பவம் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. இந்த விபத்... மேலும் பார்க்க