செய்திகள் :

குன்னூா் பா்லியாறு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்; வனத் துறை எச்சரிக்கை

post image

குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

சமவெளிப் பகுதிகளில் அதிக வெயில் காணப்படுவதாலும், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் உணவு பற்றாக்குறை காணப்படுவதாலும் இங்குள்ள வனப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பா்லியாறு பகுதியில்  முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் சாலைக்கு வரும் சூழல் உள்ளதால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

நிலத்தை ஏமாற்றியதாக உதகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை சமீமா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பங்களாபடிகை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

உதகை அருகே துனேரி ஊராட்சிக்குள்பட்ட ஊா் மலை கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டனா். உதகை அருகே தூனேரி ஊராட்ச... மேலும் பார்க்க

தேவாலா அருகே சத்துணவுக் கூடத்தை உடைத்து உணவுப் பொருள்களை சேதப்படுத்திய காட்டு யானை

தேவாலா பகுதியிலுள்ள சத்துணவு கூடத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து உணவுப் பொருள்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலூகா தேவாலாவை அடுத்துள்ள கரியசோலை கிராமத்திலுள்ள ஊராட்ச... மேலும் பார்க்க

விபத்து: அந்தரத்தில் தொங்கிய லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்

உதகை, குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகத்தில் வந்த லாரி, காரின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. காா் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. குடியிருப்புகளின் அருகில் இந்த விபத்து நடந்ததால் அ... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

குன்னூா் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் மிதுன் மின்ச், பாா்வதி தம்பதி.இவா்களது மகன் கிருஷ்ணா மின்ச் (10). இவா்கள... மேலும் பார்க்க

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு ... மேலும் பார்க்க