செய்திகள் :

குபேரா: முதல்நாள் வசூல் எவ்வளவு?

post image

தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் ரூ.13 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக வெளியான தனுஷின் ராயன் படத்தினை விட குபேரா குறைவாக வசூலித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் முதல்நாளில் ரூ.15. 7 கோடி வசூலித்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள குபேரா திரைப்படம் தெலுங்கு இயக்குநர் இயக்கியதால் தெலுங்கில் மட்டும் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் தனது மகன் லிங்காவுடன் முதல்நால் முதல்காட்சியை சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கில் கண்டுகளித்துள்ளார்.

ரசிகர்களின் ஆதரவில் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தன.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் உடன் நாகார்ஜுனா, ரஷ்மிகா நடிப்பில் குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று (ஜூன் 20) வெளியானது.

தணிக்கைச் சான்றிதழுக்குப் பிறகு 19 காட்சிகள் நீக்கப்பட்டன. சுமார் 13 நிமிஷம் 41 நொடிகள் நீங்கி கடைசியில் 3 மணிநேரம் 1 நிமிஷம் கொண்டதாக வெளியானது.

வெளியானது விமலின் 'தேசிங்கு ராஜா 2' பட டீசர்!

விமல் நடிப்பில் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக... மேலும் பார்க்க

11வது சர்வதேச யோகா நாள் - புகைப்படங்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி.புதுதில்லியில் உள்ள லோதி கார்டனில் நடைபெற்ற 11வது சர்வதேச யோகா பயிற்சி ந... மேலும் பார்க்க

த்ரிஷ்யம் - 3 ரிலீஸ் அப்டேட்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் பகிர்ந்துள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர்மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ... மேலும் பார்க்க

நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி! ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது?

இயக்குநர் நெல்சன் பிறந்தநாளில் ஜெயிலர் 2 படக்குழு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். கூலி திரப்படம் ஆ... மேலும் பார்க்க

ஆமிர் கானின் சித்தாரே ஜமீன் பர் முதல் நாள் வசூல்!

பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் நடிப்பில் வெளியான ”சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். வர்த்த... மேலும் பார்க்க