செய்திகள் :

வெளியானது விமலின் 'தேசிங்கு ராஜா 2' பட டீசர்!

post image

விமல் நடிப்பில் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார்.

காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் விமல் நாயகனாக நடிக்க எழில் இயக்கி வருகிறார். படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

வித்யாசாகர் இசை அமைக்கிறார். வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படம் ஜூலை 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பவன் கல்யாணின் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கில்லி முதல் நண்பன் வரை... விஜய்க்கு திருப்பம் தந்த ரீமேக் படங்கள் !

விஜய் அது ஒரு மந்திரச் சொல். அந்தப் பெயருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் தன்மை உண்டு. விஜய், சாதாரணமாக இந்த நிலையை அடைந்துவிட வில்லை. பல அவமானங்கள், விமர்சனங்களை கடந்துதான் இந்த உச்சத்... மேலும் பார்க்க

11வது சர்வதேச யோகா நாள் - புகைப்படங்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி.புதுதில்லியில் உள்ள லோதி கார்டனில் நடைபெற்ற 11வது சர்வதேச யோகா பயிற்சி ந... மேலும் பார்க்க

த்ரிஷ்யம் - 3 ரிலீஸ் அப்டேட்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் பகிர்ந்துள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர்மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ... மேலும் பார்க்க

நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி! ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது?

இயக்குநர் நெல்சன் பிறந்தநாளில் ஜெயிலர் 2 படக்குழு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். கூலி திரப்படம் ஆ... மேலும் பார்க்க

ஆமிர் கானின் சித்தாரே ஜமீன் பர் முதல் நாள் வசூல்!

பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் நடிப்பில் வெளியான ”சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். வர்த்த... மேலும் பார்க்க