செய்திகள் :

குமார சம்பவம் டிரைலர்!

post image

நடிகர் குமரன் தங்கராஜன் நாயகனாக அறிமுகமாகும் குமார சம்பவம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாடா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று கவனம் ஈர்த்தவர் குமரன் தங்கராஜன்.

ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் இவர் சின்ன திரையில் அறிமுகமானார். இத்தொடரில் சிறிய பாத்திரத்தில் குறைந்த நாள்கள் இவர் நடித்திருந்தாலும், தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அடுத்ததாக, லக்கி மேன் படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான குமார சம்பவம் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

தற்போது, இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். விரைவில் வெளியாகும் இப்படத்தில் பால சரவணன் லிவிங்ஸ்டன், வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வீனஸ் இன்பொடெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

இதையும் படிக்க: கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்! 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.கண்ணப்பாதெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி ... மேலும் பார்க்க

வெற்றியுடன் தொடங்குமா இளம் ஸ்பெயின் அணி? யமால், பெட்ரி மீது அதீத எதிர்பார்ப்பு!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தனது முதல் போட்டியில் களமிறங்கும் ஸ்பெயின் அணி நாளை தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இளம் ஸ்பெயின் அணியின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

வடசென்னை உலகில்.. சிம்பு! எஸ்டிஆர்-49 முன்னோட்ட விடியோ!

நடிகர் சிலம்பரசனின் 49-வது திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.இயக்குநர் வெற்றிமாறனின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இயக்கத்தில் உருவாகும் நடிகர் சிலம்பரசனின் 49 வது திரைப்படத்தின் ம... மேலும் பார்க்க