செய்திகள் :

கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவற்றில் இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞர்கள் பலி

post image

கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவற்றின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலியானார்கள்.

கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் மணிகண்டன் ( 27 ). கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சகாதேவன் மகன் முத்துவேல் (24).

இருவரும் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் நண்பர்களை பார்க்கச் சென்றனர். வாகனத்தை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். முத்துவேல் பின்புறம் அமர்ந்திருந்தார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள இப்படி ஒரு வசதியா?

பின்னர் ஊருக்கு திரும்போது கும்பகோணம் அருகே கொட்டையூர் புறவழிச்சாலையில் வேகமாக சென்றனர்.

திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் கிடைத்ததும் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன் இருவரது சடலத்தையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தார்.

அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! -ஜாவேத் அக்தர்

அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைக்க நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அமலாக்கத் துறைக்குப் பயப்படுவதாலேயே திரைத்துறை சார் பிரபலங்கள் அமைதியாக இருப்பதாகவும் கவிஞர் ஜாவேத் அக்தர் ஜாவேத் அக்தர் தெரிவித்தி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை!

இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தா... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஆபரேஷன்... மேலும் பார்க்க

வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்ட பெற்றோர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவிவந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் "சிந்தூர்" எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் ... மேலும் பார்க்க

பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட பாதுகாப்பு அமைப்பு: ராஜீவ் கயி

புது தில்லி: பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃ... மேலும் பார்க்க

எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம்: வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்

புது தில்லி: தேர்ந்தெடுக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது, எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம் என்று கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைரஸ்... மேலும் பார்க்க