திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி
கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரு ஜீப்பில் கும்பமேளா நடைபெறும் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்றுவிட்டு காசிக்கு திரும்பும்போது வாரணாசியில் மிர்ஸா முராரா பகுதிக்கு அருகே ஜீப் வரும்போது, நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.