செய்திகள் :

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

post image

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது.

அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருபகுதியினர் தங்கள் சொந்த வாகனங்களிலும் பிறர் பொது போக்குவரத்து சேவையையும் சார்ந்துள்ளனர்.

அப்படியிருக்கையில், பிரயாக்ராஜுக்கு போதிய எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படாததால் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் பலருக்கு ரயில்களில் இடம் கிடைக்காததால் அவர்கள் இன்ஜின் மீது ஏறிச் செல்ல முற்பட்டதையும் காண முடிந்தது. நல்வாய்ப்பாக விபத்துகளும் அசம்பவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பிகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் நேற்று(பிப். 10) நின்று கொண்டிருந்த, ஜெயா நகரிலிருந்து பிரயாக்ராஜ் வழியாக புது தில்லிக்கு செல்லும் சுவதந்திரதா சேனானி எக்ஸ்பிரஸ்(12561) ரயிலில் இடம்பிடிக்க பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தனர். இதன் காரணமாக நெரிசலும் தள்ளுமுள்ளும் உண்டானது.

ரயிலில் இடம் கிடைக்காத விரக்தியில் பயணிகள் சிலர், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இதனால் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னரும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை காண முடிந்தது.

எனினும், சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை(ஆர்பிஎஃப்) காவலர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரயில் மீது கற்களை வீசி எறிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ரயில், உடைந்த ஜன்னல் கண்ணாடிகளுடனே இயக்கப்பட்டதால், சமஸ்திபூர் ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்ததும் பயணிகள் சிலர் இந்த ஜன்னல்கள் வழியாக ஏசி வகுப்பு பெட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்?- மக்களவையில் அகிலேஷ் யாதவ் கேள்வி

‘மகா கும்பமேளாவில் நிா்வாக சீா்கேடுகளால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகாரபூா்வமாக வெளியிடாதது ஏன்?’ என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கேள்வி ... மேலும் பார்க்க

ஜம்மு: கண்ணிவெடி தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு

ஜம்முவின் அக்னூா் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே பயங்கரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் கேப்டன் உள்பட 2 ராணுவ வீரா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து அதிக... மேலும் பார்க்க

சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள்: மத்திய முதல் இரண்டு இடங்களில் உ.பி., குஜராத்

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனைக் கைதிகள் அடைப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதில் 95 மரண தண்டனைக் கைதிகளுடன் பாஜக ஆளும் உத்தர பிரதே... மேலும் பார்க்க

கேரள கடலோரத்தில் கனிமங்களை வெட்டியெடுக்க அனுமதியில்லை: மாநில அரசு திட்டவட்டம்

கேரள கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை அனுமதிக்க முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மாநில சட்டப்பேரவையில... மேலும் பார்க்க

ஜேஇஇ முதல்நிலை தோ்வு: 14 மாணவா்கள் 100 மதிப்பெண்

ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) 2025-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வில் 14 மாணவா்கள் முழுமையான 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ள... மேலும் பார்க்க