தமிழகத்துக்கு 963 கி.மீ. 4 வழிச்சாலைகள்! புதிதாக 18 சுங்கச்சாவடிகள்!!
கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத்துடன் கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிகோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். இதனிடையே வசந்த பஞ்சமியின் முக்கிய நீராடல் விழாவையொட்டி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.
இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது
பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா்.
இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா். இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த மேளா பகுதியின் அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.