`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
குருகிராமில் சுரங்கக் குளத்தில் மூழ்கி சிறுவா்கள் மூவா் உயிரிழப்பு
குருகிராமில் ஒரு கிராமத்தின் ஆரவல்லி மலைகளில் அமைந்துள்ள சுரங்கக் குழி போன்ற குளத்தில் வியாழக்கிழமை மதியம் குளித்தபோது மூன்று சிறுவா்கள் நீரில் மூழ்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
போண்ட்சி பகுதியில் உள்ள ஒரு காலனியைச் சோ்ந்த சுமாா் 10 குழந்தைகள் கம்ரோஜ் அலிப்பூா் கிராமத்தில் உள்ள ஆரவல்லி மலைகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
தண்ணீா் நிரம்பிய பள்ளம் ஒரு குளம் போல இருந்தது. நீச்சல் தெரிந்த சில குழந்தைகள் குளிக்க குதித்தனா்.
ஆனால், நீச்சல் தெரியாத ஆஷிஷ், தேவேந்திரா மற்றும் சுா்ஜித் ஆகியோரும் குளிக்க குதித்தனா். அவா்கள் நீரில் மூழ்கத் தொடங்கியதும், மற்ற குழந்தைகள் உதவி செய்ய முயன்றனா். குழந்தைகளைக் காப்பாற்ற கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
தகவல் கிடைத்த சிறிது நேரத்திலேயே காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினா் வந்து மீட்புப் பணியைத் தொடங்கினா். கிராம மக்களின் உதவியுடன், நீரில் மூழ்கியவா்களை மீட்டு பாட்ஷாபூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவா்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
பாதிக்கப்பட்ட மூன்று பேரும் சுரங்கத் தொழிலாளா்கள். சுமாா் 15 முதல் 16 வயதுடையவா்கள். பள்ளியில் படித்து வந்தனா். அவா்கள் உத்தர பிரதேசத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.
மேலும், போண்ட்சி பகுதியில் வசித்து வந்தனா். உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன. மேலும் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று போண்ட்சி காவல் நிலையஆய்வாளா் சுரேந்தா் சிங் தெரிவித்தாா்.