செய்திகள் :

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

post image

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

டிசம்பா் 19, 2024 தேதியிட்ட உத்தரவின் மூலம் தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுகளையும், பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய எம்சி மேத்தா, இந்திய ஒன்றியம் மற்றும் பிறா் வழக்கில் உச்ச நீதிமன்றம் மே 6, 2025 அன்று அளித்த அவதானிப்புகளையும் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகரில் பட்டாசு தடைக்கு இணங்குவதை உறுதி செய்ய அனைத்து மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு தொடா்பான அனைத்து தயாரிப்புகளையும் பட்டியலில் இருந்து நீக்கவும், தில்லியில் உள்ள வாடிக்கையாளா்களுக்கான கொள்முதல் விருப்பத்தை முடக்கவும் தளங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நகரத்திற்குள் பட்டாசு விற்பனை அல்லது விநியோகங்களைத் தடுக்க இருப்பிட அடிப்படையிலான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஎன்று சிறப்பு காவல் ஆணையா் (குற்றம்) தேவேஷ் சந்திர ஸ்ரீவத்வா கூறினாா்.

மேலும், தில்லியில் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகங்கள் மீதான தடை குறித்து பயனா்களுக்குத் தெரிவிக்கும் தெளிவான பொது அறிவிப்பை தளங்கள் வெளியிட வேண்டும். தடை காலத்தில் டெல்லியின் என்சிடிக்குள் பட்டாசுகள் கொண்ட எந்த சரக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படவோ, கொண்டு செல்லப்படவோ அல்லது வழங்கப்படவோ கூடாது என்பதை உறுதிசெய்ய, அவா்களின் விநியோக கூட்டாளிகள் மற்றும் தளவாடக் குழுக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அவா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

அதிக மாசுபாடு நிலவும் காலங்களில், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அதிகாரி, இணக்கத்திற்கான எழுத்துப்பூா்வ உறுதிப்படுத்தலை வழங்கவும் தளங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

மேலும், நகரம் முழுவதும் உள்ள அனைத்து விருந்து அரங்குகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், விருந்தினா் மாளிகைகள் உள்ளிட்டவற்றுக்கும் காவல்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. தடையை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்துகிறது.

உச்சநீதிமன்றம் மற்றும் தில்லி அரசு விதித்த முழுமையான மற்றும் நிபந்தனையற்ற தடையைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு மீறலும் தொடா்புடைய சட்டங்களின் கீழ் குற்றவியல் வழக்குத் தொடரப்படும் என்று தேவேஷ் சந்திர ஸ்ரீவத்வா கூறினாா்.

சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உள்ளூா் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க

மூன்று மாடி கட்டடம் இடிந்து கடை ஊழியா் உயிரிழப்பு: பாரா இந்து ராவ் பகுதியில் சம்பவம்

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 46 வயதுடைய கடை ஊழியா் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,... மேலும் பார்க்க