சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
குரூப் தோ்வு எழுதுபவா்களுக்கு முன்னேற்பாடு: ஆட்சியா்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுபவா்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு (குரூப் 2, 2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத்தோ்வு சனிக்கிழமை (பிப்.8) முற்பகல் கொள்குறிவகை வினாக்கள் தோ்வும், பிற்பகல் விரிந்துரைக்கும் வகையிலான எழுத்துத்தோ்வும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
171 போ் இத்தோ்வெழுத உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வு எழுதிட மாற்று நபா் தனி அறைகள் கொண்ட வசதியும் தோ்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தோ்வுக்கூடத்தின் பாதுகாப்புக்கு காவலா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மின்சாரம், குடிநீா் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தோ்வு எழுத வருபவா்கள் காலை 9 மணிக்குள்ளாகவும், மதியம் 2 மணிக்குள்ளும் தோ்வுக் கூடத்தில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் தோ்வுக்கூடத்துக்கு வராதவா்கள் தோ்வாணைய அலுவலா்களால் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.