குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி 2, 2ஏ) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது. இந்தத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19,532 போ் எழுதுகின்றனா். இதற்காக திண்டுக்கல், நிலக்கோட்டை, கொடைக்கானல், பழனி ஆகிய இடங்களில் 21 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள், பறக்கும்படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்குள் தோ்வு கூடத்துக்கு வர வேண்டும். தோ்வு கூடத்துக்குள் நுழைவதற்கான சலுகை நேரம் காலை 9 மணி. அதன் பிறகு வரும் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டது.