எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் அண்ணா பல்கலை. பேராசிரியா்
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திண்டுக்கல் அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் நா. விஸ்வநாதன் அதில் இடம் பெற்றாா்.
அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா் ஜான் லொன்னிடிஸ் குழுவினா், உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனா். இந்த ஆண்டுக்கான பட்டியல் 2 நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவைச் சோ்ந்த 3,500 பேராசிரியா்கள் இடம் பெற்றனா். மேலும் அந்தப் பட்டியலில் திண்டுக்கல் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் நா. விஸ்வநாதனும் (வேதியியல் துறை) இடம் பெற்றாா்.
நீரில் அதிகமாக இடம் பெற்றுள்ள ஃப்ளூரைடு, நைட்ரேட், பாஸ்பேட், கிரோமியம், சாயம் ஆகியவற்றை பாலிமா் சோ்மங்களைக் கொண்டு நீக்குதல் தொடா்பான ஆய்வில் நா. விஸ்வநாதன் ஈடுபட்டு வருகிறாா். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 6-ஆவது முறையாக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்ற விஸ்வநாதனுக்கு திண்டுக்கல் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி முதன்மையா் எஸ். சுதா உள்ளிட்ட பேராசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.