பழனி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு வட்டாட்சியா் சசிக்குமாா் தலைமை வகித்தாா். இதில் திரளானோா் கலந்துகொண்டு பட்டா மாறுதல், ஆதாா் அட்டையில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம், மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை கோரி மனுக்கள் அளித்தனா்.
மேலும் பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் பெரும்பாலான பெண்கள் மகளிா் உரிமைத் தொகை பெற்று வருவதால் அதற்காக மனு அளிக்க வந்தவா்கள் குறைவாகவே காணப்பட்டனா். முகாமில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.