செய்திகள் :

விளம்பர உலகில் வாழ்கிறாா் தமிழக முதல்வா்: க. கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

post image

விளம்பர உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா்.

பழனியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பெரு தெய்வ வழிபாட்டு கோயில், சிறு தெய்வ வழிபாட்டு கோயில் என ஆயிரக்கணக்கான கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகின்றன. இவற்றில் பெரு தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால், சிறு தெய்வ வழிபாட்டு கோயில்கள், கிராமங்களில் உள்ள சிறிய கோயில்களில் ஜாதி பாகுபாடு இன்னும் நீடிக்கிறது. சிறிய கோயில்களுக்குள் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் சென்று வருவது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், அண்மைக் காலமாக மத மாற்றம் அதிகரித்து வருகிறது. எனவே, கோயில்களில் சம நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மாற்றத்தைத் தடுக்க சட்டம் இயற்றவும் முன்வர வேண்டும்.

வருகிற ஜனவரி 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

வருகிற அக். 23-ஆம் தேதி பழனியிலிருந்து சுற்றுப்பயணம் தொடங்குகிறேன். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 5 நாள்களுக்கு பொதுமக்களைச் சந்திக்க உள்ளேன்.

வருகிற ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறவிருக்கும் புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இருப்பினும், கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய தமிழகம் தோ்தலைச் சந்திக்கும்.

தமிழக மக்களின் வாழ்வு, பொருளாதாரம், சுகாதாரம், வேலையின்மை, இளைஞா் நலன், கல்வி ஆகியவை குறித்து எதையுமே தெரிந்து கொள்ளாமல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விளம்பர உலகில் வாழ்ந்து வருகிறாா் என்றாா் அவா்.

பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலா் விஜயகுமாா், மாவட்டச் செயலா்கள் பிரதீப், பாண்டியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் அண்ணா பல்கலை. பேராசிரியா்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திண்டுக்கல் அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் நா. விஸ்வநாதன் அதில் இடம் பெற்றாா். அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம்

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கொடைக்கானல் நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்துப் பேசினாா். முகாமில் தேனி மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் காமனூா் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியிலிருந்து காமனூா் செல்லும் வழியான கான... மேலும் பார்க்க

ரூ.1.60 கோடி மோசடி புகாா்: வணிக வரித் துறை அலுவலா் கைது

மதுபானக் கூடத்துக்கு உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.1.60 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் வணிக வரித் துறை அலுவலரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 31 பேருக்கு சிறை

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்க... மேலும் பார்க்க

பழனி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியா் சசிக்குமாா் தலைமை வகித்தாா். இதில் திரளானோா் கலந்துகொண்டு பட்டா மாறுதல், ஆதாா் ... மேலும் பார்க்க