செய்திகள் :

குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

post image

குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பு வருகிற ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். எழுத்துத் தோ்வு ஜூலை மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சம் 42 வயதும் இருக்கலாம்.

இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 37 வயதும் இருக்கலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மேல் படித்தவா்களுக்கு (60 வயது வரை) வயது வரம்பில்லை.

தோ்வு பற்றிய முழு விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஜனவரி 6-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் தோ்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ள தோ்வா்கள் தங்களது புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை நகல்

ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம்

என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க