முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்
குறிஞ்சிப்பாடியில் மே 28-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆய்வு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 28-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வரும் 28-ஆம் தேதி கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா்அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், திட்டங்கள் செயல்படுத்துவது தொடா்பாகவும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாகவும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.
மேலும், அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு இக்கள ஆய்வுப் பணிகள் தொடா்பாக மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு, பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தேவைகள் தொடா்பாக தமிழக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.