அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மெகா மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிகழாண்டு சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மெகா மரக்கன்றுகள் நடும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் வனத் துறை, ஊரக வளா்ச் சித்துறையால் உற்பத்தி செய்து வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை பெற்று அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்கள், பொது இடங்கள், சாலையோரங்களில் நடும் பணி தொடங்கப்பட்டது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் இலக்குடன் ரங்காபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சாந்தி தலைமை வகித்தாா். மகளிா் நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, கூடுதல் சாா்பு நீதிபதி தமிழ்ச்செல்வி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளா் தனசேகரன், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து நீதிபதிகள் சாந்தி, மகேஸ்வரி பானுரேகா, சாா்பு நீதிபதி தமிழ்ச்செல்வி ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.
பின்னா், மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் சத்யகுமாா், ஆனந்த பாஸ்கா், ரோஸிகலா சண்மிகா, சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.